Breaking News

டெல்லி மௌலானா சாத் பிரதமர் நிவாரண நிதிக்கு 1கோடி வழங்கினாரா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
டெல்லி மௌலானா சாத் அவர்கள்  பிரதமர் நிவாரண நிதிக்கு 1கோடி வழங்கினார் என்று ஒரு செய்தியை  நியூஸ் லெட்டர் செய்தி தாளின் முதல் பக்கத்தில் அவரின் புகைப்படத்துடன் சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

"நியூஸ் லட்டர் " என்பது வடக்கு அயர்லாந்தை தளமாகக் கொண்ட ஒரு ஆங்கில செய்தி வலைத்தளம்.

பிரதமரின் நிவாரண நிதிக்கு ஒரு இந்திய முஸ்லீம் மதகுரு நன்கொடை அளிப்பது குறித்து அயர்லாந்தில் இருந்து ஒரு செய்தி வலைத்தளம் அதன் முதல் பக்க செய்திகளை வெளியிடுவதும் ஆச்சரியமாக இருக்கிறது அதனால் தான் அதனை உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்கின்றார்கள்

அந்த செய்தி தாளின் முதல் பக்கத்தின் படத்தில் உள்ள டேட்லைன் மார்ச் 30, 2020 என்று கூறுவதால், அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்திகளின் காப்பக பட்டியலை பார்த்தால்

மார்ச் 30, 2020 அன்று வெளியிடப்பட்ட இந்தியா அல்லது மௌலான சாத் தொடர்பான எந்த செய்தியையும் அதில் இல்லை

எனவே அந்த செய்தி பொய்யனாது இது எடிட் செய்யபட்டது என சந்தேகம் வந்து தேடியதில் ஆம் உண்மை தான் அது போட்டோஷாப் செய்து எடிட் செய்யபட்டது ஆகும் அந்த அசல் செய்தி தாள் பார்க்க


மேலும் அத்துடன் விப்ரேவின் தலைவர்  ஹாசிம் பிரேம்ஜியின் அறக்கட்டளை சார்பாக கொரேனா நீதியாக 1125 கோடி வழங்கப்பட்ட செய்தியும் அதில் உள்ளது

அதற்கு நாம் ஏற்கனவே அட்மின் மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது

https://www.adminmedia.in/2020/03/50.html?m=1


அட்மின் மீடியா ஆதாரம்

https://www.newsletter.co.uk/archive/2020/03/30

அட்மின் மீடியா ஆதாரம்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback