Breaking News

கொரானா குறித்து அல் குர் ஆனில் கூறபட்டுள்ளதா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
3
 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஒரு செய்தியினையும் ஓர் ஆடியோவினையும் ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த ஆடியோவில் 1500 ஆண்டுகளுக்கு முன்பே அல் குர் ஆனில் கொரானா குறித்து கூறபட்டுள்லது என ஷேர் செய்கின்றார்கள்


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


நாம் அவர்களுக்கு (தீய) கூட்டாளிகளை இணைத்து விட்டோம்; ஆகவே, (அத்தீய கூட்டாளிகள்) அவர்களுக்கு, முன்னாலிருப்பதையும் பின்னாலிருப்பதையும் அழகாக்கிக் காண்பித்தார்கள்; அன்றியும் அவர்களுக்கு முன்னே சென்று போன ஜின்களும் மனிதர்களுமாகிய சமுதாயத்தார் மீது நம்வாக்கு உறுதியாகிவிட்டது - நிச்சயமாக அவர்கள் நஷ்டவாளிகளாயினர்.  அல்குர்ஆன் : 41:25
இந்த ஆயத்திலுள்ள "குறனா அ" என்பதற்கு தீய கூட்டாளிகள்  என்பது பொருள்.
இதுதான் இந்த வசனத்தில் உள்ள விளக்கமாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் இப்போது இருக்கும் கொரனா (நோய்க்கும்)இந்த வசனத்திறக்கும் எந்த சம்பந்தமும் இல்லை


அட்மின் மீடியா ஆதாரம்:

http://www.tamililquran.com/qurandisp.php?start=41

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

3 Comments