Breaking News

நாடுமுழுவதும் அமலுக்கு வந்தது குடியுரிமை சட்டம்? மத்திய அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
3
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டம், நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று ஜனவரி 10 இரவு அறிவித்தது.

பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில், மதரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் சிறுபான்மையினருக்கு, இந்திய குடியுரிமை வழங்கும் மசோதா, பார்லிமென்ட்டில் சமீபத்தில் நிறைவேறியது.

ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு, இது சட்டமானது.

இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், இந்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல போராட்டங்கள் வன்முறையாகமாறியது

பல மாநில முதல்வர்கள் இதனை தங்கள் மாநிலத்தில் அமல் படுத்த போவதில்லை என்று அறிவித்துள்ளார்கள்

உச்சநீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது
இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை, அரசிதழில், மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதன் மூலம், இச்சட்டம், நேற்று இரவு முதல், நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback

3 Comments

  1. ஓட்டுக்காக ஆளுங்கட்சி மற்றும் முஸ்லிம்களுக்குகாக நாடுகள் என்றால்

    ReplyDelete
  2. எங்களுக்கு ஏன் இந்த சோதனை யா அல்லாஹ் எங்கள் அனைவருக்கு நல்லாட்சி அளிப்பாயாக

    ReplyDelete
  3. உச்சநீதிமன்ற தீர்பிற்கு முன்பு ஏன் இந்த அவசரம்?

    ReplyDelete