Breaking News

குடியுரிமை சட்ட திருத்த மசோதா பற்றி அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில்....

அட்மின் மீடியா
1
குடியுரிமை சட்ட மசோதாவை பற்றி அட்மின் மீடியாவின் பார்வை...

குடியுரிமை சட்ட மசோதா மக்களவையிலும், மாநிலங்களைவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதனால் நாடு முழுவதும் இந்த மசோதா குறித்து விமர்சனங்களும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.


அப்படி என்னதான் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.?

குடியுரிமை சட்டதிருத்த மசோதா என்றால் என்ன?

இதில் என்ன பிரச்சனை உள்ளது

என்பதனை நாம் நமது அட்மின் மீடியாவுடன் இனைந்து நமது பதிவின் மூலமாக  முழுமையாக பார்க்க இருக்கின்றோம்...

வாருங்கள் பார்க்கலாம்...

பொதுவாக வெளிநாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்தியக் குடிமகனாக முடியாது.

அவர்கள் பொதுவாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுவார்கள்.

ஆனால் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினர்களுக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும்,  இந்த சட்டத் திருத்தம் அவர்களை இந்தியக் குடிமகனாக அங்கீகரிக்க வழிவகை செய்கிறது.

1955ல் கொண்டு வரப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டு வரும் சட்ட திருத்தம்தான் இந்த இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆகும்.

இந்த பழைய சட்டத்தின் படி இந்தியாவில் பிறந்தவர்களும் இந்தியாவிற்கு முறையாக அனுமதியோடு வந்து 11 வருடங்கள் வாழ்ந்தவர்களும் மட்டுமே இந்திய குடியுரிமை பெற முடியும். 

முறையின்றி இந்தியாவில் குடியேறிய யாரும் இந்தியாவில் குடியுரிமை பெற முடியாது.

ஆனால் தற்போது பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள்,பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதே இந்த திருத்தம்.

முன்பெல்லாம் முறையின்றி இந்தியாவில் குடியேறினால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் அல்லது கைது செய்யப்படுவார்கள். ஆனால் புதிய சட்டப்படி அரசு அவர்களை கைது செய்யாது அவர்களுக்கு குடியுரிமை அளிக்கும்.

மேலும் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இதனை எதிர்ப்பவர்கள் கூறுவது என்ன?

மதச்சார்பின்மை எனும் இந்தியாவின் அடித்தளத்தையே இது சிதைத்துவிடும் என்கிறார்கள் இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள்.

இந்திய அரசமைப்பு மதத்தின் பெயரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்கிறது.

அதுமட்டுமல்லாமல் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. ஆனால், இது மதபாகுபாட்டிற்கு சட்ட அங்கீகாரம் தருகிறது இந்த சட்டம் திருத்தம் என்கிறார்கள் இதனை எதிர்ப்பவர்கள்.

சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகத்தான் இந்த சட்டம் என்றால் 

இதில் இஸ்லாமியர்களையும் சேர்த்து இருக்க வேண்டும். 

ஏன் இலங்கையில் இன்னல்களை சந்தித்த இலங்கை தமிழர்களையும், பாகிஸ்தான் அகமதியாக்களையும், மியான்மர் ரோஹிஞ்சாகளையும் விட்டுவிட்டார்கள் என கேள்வி எழுப்புகிறார்கள் அவர்கள்.

ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளும் இஸ்லாமியப் பெரும்பான்மை நாடுகள். 

அங்கு அரசே இஸ்லாமிய அரசாக இருக்கிறது, அல்லது இஸ்லாமிய ஆயுதக்குழுக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. 

அதுபோக அவர்கள் அங்குள்ள சிறுபான்மை மக்களைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். 

அவர்களுக்குப் பாதுகாப்பு தேவை என சிவராஜ் இதழின் ஆசிரியர் R.ஜெகநாதன் இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து இருந்தார்.



இஸ்லாமியர்கள் எதிர்பதற்கான காரணம் என்ன???

அனைவரும் இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எப்படி எதிரானது என்று கேட்கலாம். 

இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது. 

அவர்கள் இந்தியாவில் முறையின்றி நுழைய இதுபோல அனுமதி கிடையாது. 

இதற்கு முன் எத்தனை வருடங்களுக்கு முன் இஸ்லாமியர் ஒருவர் இந்தியாவில் நுழைந்து இருந்தாலும் அவர் கைது செய்யப்படுவார் 

அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்.

உதாரணமாக 2013 ல் ஒரு இந்துவும் இஸ்லாமியரும் வங்கதேசத்தில்  இருந்து இந்தியாவில் முறையின்றி குடியேறி இருந்தால்

அதில் இந்துவுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படும். மாறாக இஸ்லாமியர் சிறைக்கு செல்வார் அல்லது நாட்டை விட்டு செல்வார். இதுதான் இந்த மசோதாவை எதிர்க்கப்பட காரணம்.

இந்த மசோதா அனைத்து மாநிலங்களிலும் பெரிய கொதிப்பை உண்டாக்கி இருக்கிறது. 


மேலும் இதனால் 2014-ம் ஆண்டு இறுதிவரை இந்தியாவுக்குள் உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். 

இதில் முஸ்லிம்கள், இலங்கைத் தமிழர்கள் சேர்க்கப்படாததால் அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் சமத்துவத்துக்கு எதிரானது என எதிர்ப்பு எழுந்துள்ளது.

புதிய மசோதாவின் மூலம் முஸ்லீம் அல்லாத பல லட்சம் பேருக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும்.

வங்கதேசத்தில் இருந்து அசாமில் குடியேறிய பல லட்சம் முஸ்லிம்கள் சிக்கலை சந்திப்பார்கள்.

லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதா  இன்னும் இரண்டு நாட்களில் இந்த மசோதா குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும். அதன்பின் ஒரு வாரத்திற்குள் இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்குவார். பின் இது முழுக்க முழுக்க சட்டமாகும். அதன்பின் இந்த சட்டப்படி இந்தியாவில் குடியேறி இருக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாட்டு இஸ்லாமியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


இப்போது சொல்லுங்கள் 

இந்த சட்டத்தை ஆதரிக்கப்போறீங்களா??

அல்லது

எதிர்க்கப்போறீங்களா??

நாங்கள் விளக்கத்தைக் கூறி விட்டோம்...

உங்களுக்கான விடைகளை இப்பதிவின் மூலம் நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்...

சமூகப்பணியில் என்றும் அட்மின் மீடியா...




Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback

1 Comments

  1. நாட்டை ஒரு சாரர் ஆக்க முயற்சிக்கும் இந்த செயலுக்கு எனது எதிர்ப்பை பதிவு செய்கின்றேன்.

    ReplyDelete