Breaking News

சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைகிறது புதிய தலைமைச் செயலகம் அரசாணை வெளியீடு

அட்மின் மீடியா
0

 சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைகிறது புதிய தலைமைச் செயலகம் - முதற்கட்ட அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு




சென்னை பட்டினப்பாக்கத்தில் கடற்கரையையொட்டி புதிய தலைமைச் செயலக வளாகம் கட்ட அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

அண்மையில் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் விஜய், நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் சென்னையில் 20 லட்சத்து சதுர அடி பரப்பளவில் ரூபாய் 1200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்" என்று அறிவித்தார்.

இந்நிலையில் இன்று தமிழ்நாடு அரசு பட்டினப்பாக்கத்தில் சட்டப்பேரவையுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பட்டினப்பாக்கத்தில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ. 1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைய இருக்கிறது. புதிய தலைமைச் செயலக திட்டத்தை செயல்படுத்தி 3 தனித்தனி குழுக்களை அமைக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான 21.76 ஏக்கர் நிலங்கள் இதற்காக கையகப்படுத்தப்பட உள்ளன

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback