Breaking News

நவம்பர் 1- ம் தேதிக்குள் பெயர் பலகைகளில் தமிழ் கட்டாயம்-சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் நவம்பர் 1- ம் தேதிக்குள் பெயர் பலகைகளில் தமிழ் கட்டாயம்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வரும் நவம்பர் 1-ஆம் தேதிக்குள் கட்டாயமாகத் தமிழில் பெயர் பலகைகளை மாற்றியமைக்க வேண்டும் என்றும், தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2025 ஜூன் மாதம் தமிழ்நாடு அரசு, மாநிலத்தில் உள்ள கடைகளில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்க வேண்டும் என அரசாணை வெளியிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சுரேந்தர், தமிழ்நாடு அரசின் அரசாணையை உறுதிசெய்து உத்தர பிறப்பித்துள்ளார்.

நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வர்த்தகர்களும் வரும் நவம்பர் 1-ஆம் தேதிக்குள் தங்களது கடைப் பெயர்ப்பலகைகளில் தமிழுக்கு முதன்மை முக்கியத்துவம் கொடுத்து மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback