இன்று நள்ளிரவு சென்னைக்கும் மாமல்லபுரத்திற்க்கும் இடையே கரையை கடக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் Cyclone Ditwa
இன்று நள்ளிரவு கரையை கடக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் Cyclone Ditwa
https://www.adminmedia.in/2025/11/view-windy-live-weather.html
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், இலங்கைக்கு அதிக மழைப்பொழிவை கொடுத்து, தமிழகத்தில். ராமநாதபுரம், நாகை, தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்களில் புயலால் மழை கொட்டித் தீர்த்தது.
தற்போது வலுவிழந்த டிட்வா புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. இது தொடர்ந்து ஆந்திரா நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கி சென்னைக்கு அருகே 40 கிலோ மீட்டர் தொலைவில் நேற்று முதல் நிலைகொண்டி இருக்கிறது.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
சென்னையில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று நள்ளிரவு எண்ணூர் - மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, அடுத்த 24 மணிநேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை தொடரும். சென்னை மற்றும் திருவள்ளூரில் ஒருசில இடங்களில் கனமழை தொடரும் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்