டெல்லி செங்கோட்டை சிக்னலில் நின்றிருந்த கார் வெடித்து சிதறிய புதிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு! CCTV footage of the car blast near the Red Fort
டெல்லி செங்கோட்டை சிக்னலில் நின்றிருந்த கார் வெடித்து சிதறிய புதிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு! CCTV footage of the car blast near the Red Fort
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட கார் வெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர். இதை “பயங்கரவாதத் தாக்குதல்” என மத்திய அரசு உறுதி செய்துள்ளது.இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்திற்கு மிக அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அந்த சிசிடிவி வீடியோவில்
செங்கோட்டை மெட்ரோ நிலையம் – நுழைவு வாசல் எண் 1 அருகே போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் மெதுவாக நகரும் போது வெள்ளை நிற ஹூண்டாய் i20 கார் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்தது.
அருகே இருந்த மின்ரிக்ஷா, ஆட்டோ, டூவீலர்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிய, மக்கள் பயந்து அலறியபடி தப்பி ஓடுவது காட்சியில் தெளிவாக காணப்படுகிறது.
தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) இந்த தாக்குதலின் விசாரணையை நடத்தி வருகிறது. வெடித்த கார் எண் HR 26 CE 7674 என அடையாளம் காணப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது (JeM) அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 32 வயது மருத்துவர் டாக்டர் உமர் நபி தான் காரை ஓட்டி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/ANI/status/1988667025250832539
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.adminmedia.in/2025/11/cctv-footage-captures-exact-moment-of.html
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.adminmedia.in/2025/11/blog-post_27.html
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
