வாக்காளர்கள் செய்யவேண்டியது என்ன - தேர்தல் ஆணையம் வெளிட்ட அறிவிப்பு
அட்மின் மீடியா
0
வாக்காளர்கள் செய்யவேண்டியது என்ன - தேர்தல் ஆணையம் வெளிட்ட அறிவிப்பு
வாக்குச்சாவடி நிலை அலுவலர் என்ன செய்வார்?
- 04.11.2025 முதல் 04.12.2025 வரை உங்கள் வீட்டுக்கு 3 முறை வருகை புரிவார்
 
- பகுதியளவு முன் நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தின் இரண்டு பிரதிகளை உங்களிடம் வழங்குவார்
 
- படிவத்தை நிரப்புவதற்கு உதவுவார்
 
- நீங்கள் நிரப்பிய கணக்கெடுப்பு படிவத்தை சேகரித்து, அதன் ஒரு நகலில் படிவத்தை பெற்று கொண்டதற்கான ஒப்புகை வழங்குவார்
 
நீங்கள் செய்ய வேண்டியது என்ன:
- கணக்கெடுப்பு படிவத்தின் இரு பிரதிகளையும் நிரப்புங்கள்.
 
- தேவையானால், கணக்கெடுப்பு படிவத்தில் உங்களது சமீபத்திய புகைப்படத்தை ஒட்டுங்கள்.
 
- படிவம் நிரப்புவதில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் வாக்கு சாவடி நிலை அலுவலரை தொடர்பு கொள்ளுங்கள்
 
- நிரப்பிய படிவத்தை வாக்கு சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைத்து ஒரு பிரதியில் அவர் படிவத்தை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை பெறுங்கள்
 
ஆன்லைனில் படிவத்தை சமர்மிப்பது எப்படி
voters.eci.gov.in இணையதளத்தில் கணக்கெடுப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை நிரப்பி பின்னர் பதிவேற்றம் செய்யலாம் என SIR'கான அதிகாரியும், தேர்தல் ஆணையத்தின் விளம்பரத்திலும் சொல்லப்பட்டுள்ளது!
முன் நிரப்பப்பட்டுள்ள கணக்கெடுப்பு படிவத்தை ECINET செயலி மூலம் நிரப்பி பதிவேற்றலாம் 
அல்லது, voters.eci.gov.in இணையதளத்திற்கு சென்று கணக்கெடுப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து, நிரப்பி, பின்னர் ஆன்லைனில் பதிவேற்றவும்
மேலும் தகவல்களுக்கு 1950 என்ற  இலவச வாக்காளர் உதவி சேவை எண்ணை அழைக்கவும்
Tags: தமிழக செய்திகள்