Breaking News

ஈரான் அரசு தொலைக்காட்சி நேரலையில் செய்தி வாசித்து கொண்டு இருக்கும் போதே தாக்குதல் நடத்திய இஸ்ரேல் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

ஈரான் அரசு தொலைக்காட்சி நேரலையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் வைரல் வீடியோ




ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்களை குறிவைத்து ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், ஈரான் புரட்சிப்படை தளபதி ஹோசைன் சலாமி, 2 அணு ஆயுத விஞ்ஞானிகள் உட்பட 4 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், “ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்” என்ற பெயரில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நோக்கி ஏவுகணைகளை ஏவியது. நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை டெல் அவிவ் நகரை குறிவைத்து ஈரான் ஏவின. இஸ்ரேலின் அயன் டோம் என்ற பாதுகாப்பு கட்டமைப்பை மீறி ஈரானின ஏவுகணைகள் இஸ்ரேலை பதம் பார்த்தன. 

ஈரான் தாக்குதலில் உருக்குலைந்த இஸ்ரேல் நாட்டின் Bat Yam நகரம் வைரலாகும் வீடியோ காட்சிகள் Iranian attack on Bat Yam in Israel

https://www.adminmedia.in/2025/06/bat-yam-iranian-attack-on-bat-yam-in.html

இந்த நிலையில், இஸ்ரேல் ராணுவம் நேற்று (ஜுன் 16) ஈரான் நாட்டு அரசு தொலைக்காட்சி நிறுவனம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 

தாக்குதல் நடந்த போது அரசு செய்தி நிறுவனத்தின் பெண் செய்தி வாசிப்பாளர் சாகர் இமாமி என்பவர் நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது ஏவுகணை ஒன்று அந்த கட்டிடத்தை கடுமையாக தாக்கியது. 

நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த அவர், கட்டிடம் இடிந்து சிதறுவதை கண்டதும் எழுந்து ஓடினார். 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1934639127703740762

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback