ஈரான் தாக்குதலில் உருக்குலைந்த இஸ்ரேல் நாட்டின் Bat Yam நகரம் வைரலாகும் வீடியோ காட்சிகள் Iranian attack on Bat Yam in Israel
ஈரான் தாக்குதலில் உருக்குலைந்த இஸ்ரேல் நாட்டின் Bat Yam நகரம் வைரலாகும் வீடியோ காட்சிகள் Iranian attack on Bat Yam in Israel
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ஈரான் ஏவுகணைகள், டிரோன்களை பயன்படுத்தி தாக்கி வருகின்றது.
ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், ஈரான் புரட்சிப்படை தளபதி ஹோசைன் சலாமி, 2 அணு ஆயுத விஞ்ஞானிகள் உட்பட 4 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை டெல் அவிவ் நகர் மற்றும் Bat Yam நகரம் மீது குறிவைத்து ஈரான் ஏவிய் ஏவுகனைகள். இஸ்ரேலின் அயன் டோம் என்ற பாதுகாப்பு கட்டமைப்பை மீறி இஸ்ரேலை பதம் பார்த்தன.
இஸ்ரேலின் ராணுவ தலைமையகம் மீது தாக்குதல் நடத்திய ஈரானின் ஏவுகணைகள் கிர்யா பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தைத் தாக்கியது. ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் இருக்கும் பகுதியில் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
150-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் ஏவிய நிலையில் 50 ஏவுகணைகளை தடுத்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் பலத்த தாக்குதலை தொடங்கி உள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் நகரங்கள் மீது சரமாரியாக ஏவுகணைகள், டிரோன்கள் வீசப்பட்டன.இஸ்ரேலின் எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் போர் விமான எரிபொருள் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்கின. டெல்அவிவ், ஜெருசலேம், பேட் யாம், ரெஹோவோட் உள்ளிட்ட நகரங்களில் குடியிருப்பு பகுதிகள் தாக்கப்பட்டுள்ளது.
ஈரான் தாக்குதலால் இஸ்ரேல் முழுவதும் வான்வழித் தாக்குதலுக்கான அபாய ஒலி எழுப்பப்பட்டது.இதையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். ஆனாலும் ஈரான் தாக்குதலில் 8 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 3-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் அமெரிக்கா-ஈரான் இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான 6-ம் கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1933719179980628144
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1934193830573793352
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1934193748235448719
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ