Breaking News

இஸ்ரேல் நாட்டின் டெல் அவீவ் நகரம் மீது குண்டு மழை பொழிந்த ஈரான் வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ஈரான்  ஏவுகணைகள், டிரோன்களை பயன்படுத்தி வருகின்றது.

மேலும் இஸ்ரேல் வான் பாதுகாப்பை தகர்த்து ஈரான் ஏவுகணைகள் தாக்கி வருகின்றது


ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், ஈரான் புரட்சிப்படை தளபதி ஹோசைன் சலாமி, 2 அணு ஆயுத விஞ்ஞானிகள் உட்பட 4 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை டெல் அவிவ் நகரை குறிவைத்து ஈரான் ஏவின. இஸ்ரேலின் அயன் டோம் என்ற பாதுகாப்பு கட்டமைப்பை மீறி ஈரானின ஏவுகணைகள் இஸ்ரேலை பதம் பார்த்தன. 

இஸ்ரேலின் ராணுவ தலைமையகம் மீது தாக்குதல் நடத்திய ஈரானின் ஏவுகணைகள் கிர்யா பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தைத் தாக்கியது. ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் இருக்கும் பகுதியில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. 

150-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் ஏவிய நிலையில் 50 ஏவுகணைகளை தடுத்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் பலத்த தாக்குதலை தொடங்கி உள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1933719179980628144

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback