Breaking News

பற்றி எரியும் இஸ்ரேல் - இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பான மொசாட் தலைமையகம் மீது அதிரடி தாக்குதல் நடத்திய ஈரான்

அட்மின் மீடியா
0

பற்றி எரியும் இஸ்ரேல் - இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பான மொசாட் தலைமையகம் மீது அதிரடி தாக்குதல் நடத்திய ஈரான் 


இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகளில் ஒன்று ஹெர்ஸ்லியா பகுதியில் உள்ள மொசாட் அமைப்பின் தலைமையகத்தைத் தாக்கியுள்ளதாக ஈரானிய ஊடகங்களை மேற்கொள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. டந்த 5 நாட்களாக தொடரும் ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம் நிலவி வருகிறது.

ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்துவிடுமோ என்கிற அச்சத்தில் ஜூன் 13 அன்று ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் இராணுவ இலக்குகளை குறி வைத்து ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், ஈரான் புரட்சிப்படை தளபதி ஹோசைன் சலாமி, 2 அணு ஆயுத விஞ்ஞானிகள் உட்பட 4 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

ஈரான் அரசு தொலைக்காட்சி நேரலையில் செய்தி வாசித்து கொண்டு இருக்கும் போதே தாக்குதல் நடத்திய இஸ்ரேல் வைரல் வீடியோ

https://www.adminmedia.in/2025/06/blog-post_95.html

இந்த நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், “ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்” என்ற பெயரில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நோக்கி ஏவுகணைகளை ஏவியது. நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை டெல் அவிவ் நகரை குறிவைத்து ஈரான் ஏவின. இஸ்ரேலின் அயன் டோம் என்ற பாதுகாப்பு கட்டமைப்பை மீறி ஈரானின ஏவுகணைகள் இஸ்ரேலை பதம் பார்த்தன.  

இரு நாடுகளும் பர்ஸ்பரம் நடத்தும் தாக்குதல்களினால் இரு தரப்பிலும் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.ஈரான் தலைநகா் தொஹ்ரானில் இருந்தும், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்தும் மக்கள் வெளியேற வேண்டும் என்று இரு நாடுகளும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், டெல் அவிவ் நகரில் அமைந்துள்ள இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் அமைப்பின் தலைமையகத்தைத் ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகளில் ஒன்று தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலிய ஊடகம் வெளியிட்டிருக்கும் தகவலில், நாட்டின் தலைநகர் டெல் அவிவ் நகரில் அமைந்திருக்கும் மொஸ்ஸாத் தலைமையகம் மீது ஈரான் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியிருப்பதாகவும், அப்பகுதியே கரும்புகை சூழப்பட்டுள்ளதாகவும், மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1934926522953179354

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback