வேற்று கிரகத்தில் உயிரினங்கள் உள்ளது என விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு முழு விவரம் K2-18b
பூமியிலிருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள K2-18b என்ற கிரகத்தில் உயிர்களின் அறிகுறிகள் (பயோசிக்னேச்சர்) இருக்கலாம் என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வானியல் விஞ்ஞானி டாக்டர் நிக்கு மதுசூதன் (Scientist Nikku Madhusudhan) தலைமையிலான ஆராய்ச்சிக் குழு கண்டுபிடித்துள்ளது.
பூமியை விட 2.6 மடங்கு பெரிய விட்டமும், 8.6 மடங்கு நிறையும் கொண்ட இந்தக் கிரகம், 'சூப்பர்-எர்த்' அல்லது 'மினி-நெப்டியூன்' என வகைப்படுத்தப்படுகிறது.
K2-18b என்பது நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒரு எக்ஸோபிளானட் இது, நமது சூரியனை விட சிறிய மற்றும் குளிர்ச்சியான K2-18 என்ற சிவப்பு நட்சத்திரத்தை 33 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது.
பூமியில், இந்த வாயுக்கள் உயிரினங்களால், குறிப்பாக கடல் நுண்ணுயிரிகளால் உருவாக்கப்படுகின்றன.இந்தக் கண்டுபிடிப்பு உண்மையான உயிரினங்களை விட உயிரியல் செயல்முறையை சுட்டிக்காட்டுகிறது என்று நேற்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலும் கண்காணிப்பு அவசியம் என்று அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
Tags: தொழில்நுட்பம்