சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் ஆலையில் தாக்குதல் நடத்திய ஈரான் வைரல் வீடியோ
சவுதியில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் ராணுவம் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது.
அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ராணுவ படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் தலைவர் கமேனியும் அவரின் குடும்பத்தை சேர்ந்த 17 பேரும் கொல்லப்பட்டுள்ளார்கள்.
அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ‘ஆபரேஷன் ரோரிங் லயன்’ என்ற பெயரில் ஈரான் மீது நடத்திய கூட்டு தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் தனது ஏவுகணை மற்றும் டிரோன் படைகளை வளைகுடா நாடுகளுக்கு எதிராகத் திருப்பியுள்ளது.
இதையடுத்து வளைகுடா நாடுகளில் அமைந்திருக்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க விமான போர்த்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஏற்கனவே துபாய், குவைத், பஹ்ரின், அபுதாபி போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது மட்டுமில்லாமல் துபாயில் ஒரு நட்சத்திர ஹோட்டல் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது.
அமெரிக்காவுக்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் சவுதியில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் ராணுவம் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது.
அராம்கோ உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையாகும். ஈரானின் டிரோன் தாக்குதலால் அராம்கோ நிறுவனத்தின் ராஸ் தனுரா ஆலையில் எண்ணெய் கிடங்கு தீப்பிடித்தது.
ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆலையை மூடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சவுதியில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் தாக்கப்பட்டால் உலக கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்வு ஏற்படும். எங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் திருப்பி தாக்குவோம் என வளைகுடா நாடுகள் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
சவூதி அரேபியாவின் எரிசக்தி உட்கட்டமைப்பின் முதுகெலும்பாகக் கருதப்படும் ராஸ் தனுரா நிலையம், நாளொன்றுக்கு சுமார் 5,50,000 பேரல் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது. இந்த ஆலை இலக்கு வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து கரும்புகை வெளியேறுவதும், தொழிலாளர்கள் வெளியேறுவதும் போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/k_pundir/status/2028484928074346693
Tags: வெளிநாட்டு செய்திகள்
