Breaking News

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக முன்னிலை..வாக்கு எண்ணிக்கை முழு விவரம் erode by election 2025

அட்மின் மீடியா
0

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக முன்னிலை..வாக்கு எண்ணிக்கை முழு விவரம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடந்தது. 

இதில், திமுக உட்பட மொத்தம் 46 பேர் போட்டியிட்டனர். 74,260 ஆண்கள், 80,376 பெண்கள், 21 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1.55 லட்சம் பேர் வாக்களித்தனர்.

வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளன. 17 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்படும். 

காலை 11 மணி அளவில் முன்னணி நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்படுகிறது. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன.

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் துணை ராணுவத்தினரும், உள்ளூர் போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை நிலவரம்:- மாலை 5 :00 மணி 

திமுக கட்சி   108305 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது

நாம் தமிழர் 22992  வாக்குகள் பெற்றுள்ளது

தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/AcResultByeFeb2025/candidateswise-S2298.htm

தலைநகர் டெல்லியில் ஆட்சி அமைக்க போவது யார் வாக்கு எண்ணிக்கை முன்னிலை முழு நிலவரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2025/02/delhi-voting-result-2025.html

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback