Breaking News

நாளை பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு எந்த எந்த பகுதி முழு விவரம்

அட்மின் மீடியா
0

நாளை 3 வட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு எந்த எந்த பகுதி முழு விவரம்


தஞ்சாவூர் மாவட்டம்:-

தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கை ஒட்டி நாளை (10.02.2025) தஞ்சை வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளனர். விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்.22ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக கருதப்படும் என அறிவிப்பு.

கன்னியாகுமரி மாவட்டம்:-

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் பூதப்பாண்டி கிராமம் ஸ்ரீ பூதலிங்க சுவாமி சிவகாமி அம்மாள் கோவிலில் தைப்பூசத் தேரோட்டத் திருவிழா காரணமாக நாளை (பிப்.10) நடைபெறும் தேரோட்ட நிகழ்வினை முன்னிட்டு தோவாளை வட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.

விடுமுறைக்கு ஈடாக 2025 பிப்ரவரி திங்கள் நான்காவது சனிக்கிழமை (22.02.2025) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை வட்டத்தில் வேலை நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கோவை மாவட்டம்:-

கோவை மாவட்டம் பேரூரில் உள்ள அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நாளை பிப்.10-ம் தேதி பேரூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback