ஃபாஸ்ட் டேக் பேலன்ஸ் இல்லை என்றால் 2 மடங்கு கட்டணம் முழு விவரம் fastag new rules
நாளை முதல் ஃபாஸ்ட் டேக் கொண்டு வந்திருக்கும் புதிய விதிமுறைகள் முழு விவரம். fastag new rules
சுங்கக்கட்டணம் செலுத்துவதற்கான ஃபாஸ்ட்டேக் நடைமுறையில் புதிய விதிமுறை அமலுக்கு வந்தது
ஃபாஸ்ட் டேக் கணக்கில் இருப்பு இல்லையென்றால், 2 மடங்கு அபராதம் சுங்கச்சாவடியை எட்டுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு Fastag ப்ளாக்லிஸ்டில் இருந்தாலோ, குறைந்தபட்ச இருப்புத்தொகை இன்றி இருந்தாலோ அதனை பயன்படுத்த முடியாது
ப்ளாக்லிஸ்ட் அல்லது குறைந்தபட்ச இருப்புத் தொகை இன்றி சுங்கச்சாவடியை கடந்தால் 2 மடங்குத் தொகை அபராதமாக வசூலிக்கப்படும்
Fastag-ஐ பயன்படுத்திய 10 நிமிடங்களுக்குள் அது ப்ளாக்லிஸ்ட் ஆனால், முந்தைய பணப்பரிவர்த்தனையும் ரத்தாகும் . பயணத்தை தொடங்கும் முன்பே Fastag-ன் இருப்புத் தொகை, செயல்பாட்டில் உள்ளதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்
நாடு முழுக்க பாஸ்ட் டாக்கில் புதிய விதிமுறைகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) பிப்ரவரி 17 முதல் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், சுங்கச்சாவடிகளில் அபராதங்களைத் தவிர்க்க புதிய விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிளாக்லிஸ்ட்
போதுமான அளவு பணம் ஃபாஸ்டேக் கணக்கில் இல்லாமல் இருந்தால்
கேஒய்சி சரிபார்பு செய்யாமல் இருந்தால்
வாகன சேஸ் எண் மற்றும் ரிஜிஸ்டிரேஷன் எண்களுக்கு இடையே ஆர்டிஓ ஆவணங்களில் ஒற்றுமை இல்லாமல் இருந்தால் ஃபாஸ்டேக் பிளாக்லிஸ்ட் செய்யப்படலாம்.
இந்த புதிய பாஸ்ட் டாக் விதிமுறைகள் காரணமாக பலரும் பாஸ்ட் டாக்கில் மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
புதிய விதிமுறை:-
பிளாக்லிஸ்ட் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும், 60 நிமிடங்களுக்கும் மேலாக கணக்கில் குறைவான பேலன்ஸ் இருப்பு பராமரிக்கப்படும் ஃபாஸ்டேக் கொண்ட வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து போவது தடுக்கப்படும்.
இதே போல ஃபாஸ்டேக் கணக்கில் குறைவான பணம் இருந்தால், ஒரு சுங்கச்சாவடியை அடைவதற்கு 60 நிமிடங்களுக்கு முன் அல்லது சுங்கச்சாவடியை கடந்த 10 நிமிடங்கள் வரை, வாகனங்கள் பிளாக்லிஸ்ட் செய்யப்படாமல் இருக்கும். இதற்குள் ஃபாஸ்டேக் கணக்கை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
இதுபோன்று குறைவான பேலன்ஸ் கொண்ட வாகனங்கள் 176 என்ற எச்சரிக்கை குறியீட்டுடன் இருமடங்கு கட்டணம் செலுத்தி தான் சுங்கச்சாவடியை கடக்க முடியும்.
எனவே, சுங்கச்சாவடிகளில் கூடுதல் கட்டணம் செலுத்துவது அல்லது பிளாக்லிஸ்ட் செய்யப்படாமல் இருப்பதற்கு வாகன ஓட்டிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.
விளக்கம்:-
அதாவது பாஸ்ட் டாக்கில் லோ பேலன்ஸ் இருந்தால் எல்லா டோல் கேட்டிலும் இனி ரீசார்ஜ் செய்ய முடியாது.
லோ பேலன்ஸ் காரணமாக பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால், டோல் கேட்டிற்கு செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே ரீசார்ஜ் செய்ய வேண்டும் அதாவது டோல் கேட் அருகே நின்று ரீ சார்ஜ் செய்தால் அதை டோல் கேட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கடைசி நேரத்தில் ரீசார்ஜ் செய்து தப்பிக்க முடியாது.
KYC காரணமாக பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால் டோல் கேட்டிற்கு செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே அதை சரி செய்ய வேண்டும். இந்த வாகனங்களின் பாஸ்ட் டாக் ஏற்றுக்கொள்ளப்படாது.
பிளாக் லிஸ்ட் ஆகி இருக்கும் பாஸ்ட் டாக் எதையும் டோல் கேட்களில் பயன்படுத்த கூடாது.
அபராதங்களைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
பயணங்களைத் தொடங்குவதற்கு முன்பு பாஸ்டேக்கில் போதிய பணயிருப்பு உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
சுங்கச்சாவடிகளை அடைவதற்கு முன்பு, நமது பாஸ்டேக் நிலையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: தமிழக செய்திகள்