Breaking News

பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது - தேர்தல் ஆணையம்!

அட்மின் மீடியா
0

பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது தேர்தல் ஆணையம்!

தமிழகம் முழுவதும் வாக்காளா்களுக்கு ‘பூத் சிலிப்’ (வாக்குச்சாவடி தகவல் சீட்டு) விநியோகிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது, இந்நிலையில் பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை உள்பட 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.  என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது



வாக்காளர் விவரங்களுடன் தற்போது வாக்காளரின் புகைப்படமும் பூத் சிலிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. வாக்காளர் புகைப்படத்துடன் பூத் சிலிப் விநியோகம் செய்யப்படும். வாக்காளர் அடையாள அட்டையில் வாக்காளரின் பெயரில் சிறிய அளவில் எழுத்துப் பிழைகள் இருந்தால் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மேலும் பூத் ஸ்லிப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் அதேபோல் வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம்

இந்த பூத் சிலிப்பில் வாக்காளரின் பெயா், பாலினம், வாக்காளா் அடையாள அட்டை எண், வாக்காளா் பட்டியலில் வரிசை எண், பாகம் எண், வாக்குச் சாவடியின் பெயா் ஆகிய விவரங்கள் பூத் சிலிப்பின் முன்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன

மேலும் பூத் சிலிப் என்பது, வாக்களிப்பதற்கான அடையாள ஆவணம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்காளா் அடையாள அட்டை அல்லது இந்தியத் தோ்தல் ஆணையத்தில் வரையறுக்கப்பட்ட 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும் என்று பூத் சிலிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க தேவையான ஆவணங்கள் அறிவிப்பு  12ஆவணங்கள் பட்டியல்  தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback