வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க தேவையான ஆவணங்கள் அறிவிப்பு :11 ஆவணங்கள் பட்டியல்
தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் வாக்களிக்கலாம் அதற்க்கு கீழ் உள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்
தேர்தல் ஆணையம் அங்கீகரித்த சில ஆவணங்களைக் கொண்டும் வாக்களிக்கலாம்.
1. வாக்காளர் அடையாள அட்டை
2. ஆதார் அட்டை
3. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு பணி அட்டை
4. வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகம்
5. ஓட்டுநர் உரிமம்
6. மத்திய அல்லது மாநில அரசின் பணியாளர் அடையாள அட்டை
7. பான் கார்டு
8. பாஸ்போர்ட்
9. ஓய்வூதிய ஆவணம்
10. ஸ்மார்ட் கார்ட் (தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்தியத் தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்டது
11. மருத்துவக் காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை
12. நாடாளுமன்ற / சட்டப்பேரவை உறுப்பினர்களது அலுவலக அடையாள அட்டை
என இவற்றில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
வாக்கு வாத்தியாரின் தேர்தல் பாடம் 1:
— Greater Chennai Corporation (@chennaicorp) March 2, 2021
இதில் ஏதேனும் ஒன்றை உங்களின் அடையாளச் சான்றாக வாக்குச்சாவடிக்கு எடுத்துச் செல்லுங்கள்.
தேர்தலில் வாக்களித்து உங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்.#TNElections2021 #VaakuVaathiyar #VoteChennai #IthuNammaInnings pic.twitter.com/viYsgnpGJ1
Tags: தமிழக செய்திகள்