Breaking News

சிறுத்தை நடமாட்டத்தால் மயிலாடுதுறையில் இன்று 7 பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

மயிலாடுதுறை நகரில் சுற்றித்திரியும் சிறுத்தையைப் பிடிக்க 10 குழுக்களை அமைத்து வனத்துறை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வரும் நிலையில் சிறுத்தை நடமாட்டத்தால் மயிலாடுதுறையில் இன்று 7 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே இரவு 11 மணிக்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் மற்றும் வனத்துறை ஆய்வு செய்த போது நாய்கள் சிறுத்தையை விரட்டி சென்றது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்தது. வனத்துறை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க:-

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பரபரப்பு சிசிடிவி வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்


சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தியுள்ளனர். சிறுத்தையை கண்டால் 9626709017 என்ற எண்ணுக்கு மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் - காவல்துறை எச்சரிக்கை மயிலாடுதுறை நகரில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட் டுள்ளது. ஆகையால் சிறுத்தையை பிடிக்கும் வரை குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மயிலாடுதுறை நகரில் சுற்றித்திரியும் சிறுத்தையைப் பிடிக்க 10 குழுக்களை அமைத்து வனத்துறை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வரும் நிலையில் சிறுத்தை நடமாட்டத்தால் மயிலாடுதுறையில் இன்று 7 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

மேலும் தேர்வு நடைபெறும் 4 பள்ளிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் மற்றும் வனத்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback