மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பரபரப்பு சிசிடிவி வீடியோ
மயிலாடுதுறை நகரில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே இரவு 11 மணிக்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் மற்றும் வனத்துறை ஆய்வு செய்த போது நாய்கள் சிறுத்தையை விரட்டி சென்றது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்தது. வனத்துறை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தியுள்ளனர். சிறுத்தையை கண்டால் 9626709017 என்ற எண்ணுக்கு மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் - காவல்துறை எச்சரிக்கை மயிலாடுதுறை நகரில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட் டுள்ளது. ஆகையால் சிறுத்தையை பிடிக்கும் வரை குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மயிலாடுதுறை அருகே செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட பால சரஸ்வதி மெட்ரிக் பள்ளிக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.
சிறுத்தை வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/mlddtpolice/status/1775370428258664807
Tags: தமிழக செய்திகள்
