கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டி.. நாம் தமிழர் அறிவிப்பு
கிருஷ்ணகிரி தொகுதியில் பாஜகவில் இருந்து விலகிய வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டி.. நாம் தமிழர் அறிவிப்பு
நாம் தமிழர் கட்சி கூட்டணி இல்லாமல் தனித்து களம் காண்கிறது.நாம் தமிழர் கட்சியின் 20 பெண்கள் மற்றும் 20 ஆண்கள் அடங்கிய 40 வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்போது கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா போட்டியிடுவதாக அறிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மொத்த பட்டியல் இதோ NTK candidate List 2024
வீரப்பனின் மூத்த மகள் வித்யா, 4 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். அப்போது, அவருக்கு ஓபிசி அணியின் மாநிலத் துணைத்தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது
இந்நிலையில், சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் இணைந்து கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராகியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 40 பேரில் மருத்துவர்கள் 16 பேர், பொறியியல் பட்டதாரிகள் 7 பேர், முனைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தலா 2 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: அரசியல் செய்திகள்
