jackie chan convert to islam real or fake ஜாக்கிசான் இஸ்லாத்தை ஏற்றாரா? உண்மை என்ன முழு விவரம்
அட்மின் மீடியா
0
jackie chan convert to islam real or fake கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் உலக புகழ் பெற்ற ஜாக்கிஜான் இஸ்லாத்தை தழுவினார் என பிரான்ஸ் நாட்டு ஊடகங்கள் தகவல் என்று ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
முழு விவரம்:-
பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு மலேசியாவின் உயரிய விருதான டத்தோ விருது மலேஷியா மன்னரால் ஜாக்கிசானுக்கு வழங்கப்பட்டது
அப்போது அவர் மலேசிய பாரம்பரிய தொப்பி அணிந்திருந்தார் மேலும் பதக்கம் வாங்கியவுடன் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் அவர்கள் ஜாக்கிசானுடன் புகைப்படம் எடுத்தார்
இந்நிலையில் கடந்த 2016 ம் ஆண்டு முதல் பல்வேறு காலகட்டங்களில் அவர் 2015 ல் வாங்கிய டத்தோ விருது புகைப்படத்தை பகிர்ந்து பலரும் ஜாக்கிசான் இஸ்லாத்தை ஏற்றுவிட்டார் என அவ்வப்போது பொய் பரப்பி வருகின்றார்கள்
பிரபலங்கள் இஸ்லாத்தை ஏற்றால் இஸ்லாத்திற்க்கு பெருமை என்று எண்ணுவதா?
இஸ்லாத்திற்க்கு அவரை நாம் பெருமையுடன் வரவேற்க்கின்றோம். அதேசமயம் இஸ்லாத்தை ஏற்றால் அவர்களுக்கு ஈருலகிலும் வெற்றி தான்.
பரபரப்புக்காக சில இணையதளங்கள் இது போல் பல வதந்தி செய்திகளை வெளியிடுவது வழக்கம் சகோதர்களே. இனி இதுபோன்ற செய்திகளை பரப்பும்முன் ஆராய்ந்து பகிரவும்.இல்லையேல் விட்டுவிடவும்.பாவத்தில் சிக்காமலிருக்கலாம்.
ஜாக்கி சான் பற்றி விக்கிபீடியா https://en.m.wikipedia.org/wiki/Jackie_Chan
மேற்கண்ட எங்கும் அவர் இஸ்லாத்தை ஏற்றார் என்ற செய்தி இல்லை
டத்தோ விருது என்பது:-
டத்தோ விருதுஎன்பது Datuk மலேசிய அரசாங்கம் வழங்கும் முக்கிய விருதுகளில் ஒன்றாகும். 'பாங்லிமா ஜாசா நெகாரா' எனும் Panglima Jasa Negara (PJN)[1] விருதையும் 'பாங்லிமா செத்தியா டிராஜா' எனும் Panglima Setia Diraja (PSD) விருதையும், டத்தோ விருது என்று அழைக்கிறார்கள்.
1965 ஆம் ஆண்டில் இருந்து பொதுமக்களின் சேவைகளைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது வழங்கப்படுவதிலும் சில கட்டுப்பாடுகள், வரைமுறைகள் உள்ளன.