Breaking News

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. 128 பேர் உயிரிழப்பு.! வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

நேபாளம் தலைநகர் காத்மண்டு பகுதியில் இருந்து மேற்கில் 500 கி.மீ தொலைவில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில், லாமிடாண்டா பகுதியை மையமாக கொண்டு 6.4 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது நேற்றிரவு (அந்நாட்டு நேரப்படி) 11.47 மணியளவில் ஏற்பட்டது. 



இந்த பயங்கர நிலநடுக்கத்தில் பல வீடுகள் இடிந்து விழுந்தன மற்றும் கடுமையான சேதம் அடைந்துள்ளன. உயிர் பிழைத்தவர்கள் பயத்தில் வெளியே பதுங்கியிருந்தனர், 

ரவில் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த போது பொருள்கள் அசைந்து குலுங்கியதால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் புகுந்தனர் வந்தனர்

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் மீட்புப்பணியில தடை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பல இடங்களில நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட இடத்தை நெருங்க முடியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்

இந்த நிலநடுக்கத்தினால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 128 பேர் உயிரிழந்துள்ளனர் எனvஉம் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் காயம் என தகவல் வெளியாகியுள்ளது.

இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களை உடனடியாக மீட்க நாட்டில் உள்ள அனைத்து துறைகளும் மீட்பு பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது .

நேபாள நிலநடுக்க வீடியோக்கள் பார்க்க:-

நேபாள நிலநடுக்க வீடியோக்கள் பார்க்க:-

நேபாள நிலநடுக்க வீடியோக்கள் பார்க்க:-

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback