Breaking News

இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் தொடக்கம்...!! மத்திய அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் தொடக்கம்...!! மத்திய அரசு அறிவிப்பு



இஸ்ரேல் பாலஸ்தீன போர் தொடங்கியுள்ள நிலையில் அங்கு சிக்கி தவிக்கும் இந்தியர்களை தாயகம் திரும்பச்செய்ய ஆபரேஷன் அஜய் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. காசாவில் ஹமாஸ் குழுவுடனான போருக்கு மத்தியில் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் நாடுதிரும்பும் வகையில் ஆபரேஷன் அஜய் மீட்புப் பணிகளை இந்தியா தொடங்கியுள்ளது. 

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் “சிறப்பு விமானங்கள் மற்றும் பிற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. வெளிநாட்டில் உள்ள இந்தியரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முதல் கட்டமாக நாளைய தினம் முதல் சிறப்பு விமானத்தில் இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்படுவார்கள் என இஸ்ரேலில் உள்ள இந்தியாவின் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தியா திரும்ப தூதரகத்தில் பதிவுசெய்திருந்த இந்திய குடிமக்களுக்கு சிறப்பு விமானத்தில் நாளை நாடு திரும்புவது குறித்து மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எனதகவல்கள் வெளியாகி உள்ளது

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த 212 இந்தியர்களுடன் தனி விமானம் இன்று காலை இந்தியா வந்தடைந்துள்ளது. அவர்களை மத்திய மந்திரி ராஜிவ் சந்திரசேகர் வரவேற்றார் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback