புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை முழு விவரம்
புதுச்சேரியின் விடுதலை திருநாள் மற்றும் கல்லறை திருநாளை முன்னிட்டு நாளையும், நாளை மறுநாளும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரஞ்ச் ஆதிக்கத்தின் கீழ் 1954-ம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி புதுச்சேரிக்கு விடுதலை கிடைத்தது. அன்றைய தினம் புதுச்சேரியின் விடுதலை தினமாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி வரும் நவ.1-ஆம் தேதி புதுச்சேரி கடற்கரையில் நடைபெறவுள்ள விடுதலை நாள் கொண்டாட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடியேற்றி வைத்து காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள இருக்கிறார்.
ஆகவே புதுச்சேரியின் விடுதலை திருநாள் மற்றும் கல்லறை திருநாளை முன்னிட்டு நாளையும், நாளை மறுநாளும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது
Tags: புதுச்சேரி செய்திகள்