Breaking News

ரஷியா அனுப்பிய லூனார் 25 விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கு முன்பாக விழுந்து நொறுங்கியது!! Russia's Luna-25 crashes into the moon in failure

அட்மின் மீடியா
0

 ரஷியா அனுப்பிய 'லூனார் 25' விண்கலம்நிலவில் தரையிறங்குவதற்கு முன்பாகவிழுந்து நொறுங்கியது!!


நிலவின் தென் துருவத்தை அடைய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய சந்திரயான்-3 விண்கலமானது கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

அதே போல் ரஷ்யாவும் நிலவின் தென் துருவத்திற்கு விண்கலத்தை அனுப்பும் முயற்சியில்  லூனா-25 எனும் விண்கலத்தை கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி விண்ணில் செலுத்தியது. லூனா-25 விண்கலமானது, சந்திரனின் தென் துருவத்தில் ஒரு வருடம் செயல்படும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

1957ஆம் ஆண்டு ரஷ்யா ஸ்புட்னிக் 1 என்ற தனது முதல் விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. அதன்பின்னர், 1961 இல் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட ரஷ்ய விண்வெளி வீரர் யூரி ககாரின் அந்நாட்டின் சார்பில் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரானார். 1976 இல் லூனா -24 என்ற விண்கலத்தை ரஷ்யா முதல் முறையாக நிலவுக்கு அனுப்பியது. 47 ஆண்டுகள் கழித்து லூனா-25 விண்கலத்தை அனுப்பியது. 

விண்ணில் செலுத்தப்பட்ட லூனா 25 நாளை நிலவில் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டது,  இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுற்றுப்பாதையை குறைப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டது இதனால் விண்கலத்தின் இறுதிக்கட்ட சுற்றுவட்டாபாதையை குறைக்க முடியாத சூழல் ஏற்பட்டது தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய முடியாததால் நிலவில் தரையிறங்குவதற்கு முன்பாக விழுந்து நொறுங்கியது!!47 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை ஆய்வு செய்ய ரஷியா அனுப்பிய விண்கலம் தோல்வியை சந்தித்துள்ளது


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback