மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 21 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown
மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 21 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
திருவள்ளூர் மாவட்டம்:-
விச்சூர், சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், எழில் நகர்,குளக்கரை, வெள்ளாங்குளம், மணலி நியூடவுன் பொன்னியம்மன் நகர், சுப்பிரமணி நகர், நாப்பாளையம், கொண்டக்கரை, வெள்ளிவாயல்சாவடி, சின்ன ஈச்சங்குழி மற்றும் குருவிமேடு. ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணி காரணமாக மேற்கண்ட இடங்களில் 21.08.2023 அன்று மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தேனி மாவட்டம்:-
வீரபாண்டி:வீரபாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
கோயம்புத்தூர் மாவட்டம்:-
அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம்
ஐயர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, அருவிகள், கொரங்குமுடி, தாய்முடி, ஷேக்கல்முடி, சின்னக்கல்லார், பெரிய கல்லாறு, உயர்காடு, சோலையார்நகர், முடிகள், உருளிக்கல், வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு மற்றும் மானாம்பள்ளி
திண்டுக்கல் மாவட்டம்:-
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அம்மையநாயக்கனூர் சுற்றுப் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
அம்மையநாயக்கனூர், குல்லலக்குண்டு, கந்தப்பக்கோட்டை, முருகத்தூரான்பட்டி, சாந்தலாபுரம், நிலக்கோட்டை, கொடைரோடு, தொழிற்பேட்டை, பொட்டிக்குளம்,பள்ளப்பட்டி, மாவூர் அணை ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம்:-
காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் விநியோகம் இருக்காது
ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கேயம்பாளையம் மற்றும் முருகன்காட்டு வலசு.பழையகோட்டை துணை மின் நிலையம்: பழையகோட்டை, நத்தக்காடையூா், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம் மற்றும் கண்ணம்மாபுரம். ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு:-
உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ?
மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
Tags: தமிழக செய்திகள்