உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்!
தமிழ்நாடு முழுவதும் தினமும் எங்கு, எப்போது, எவ்வளவு நேரம் மின்தடை ஏற்படும் என்று பொதுமக்கள் தெரிந்து கொள்ள மின் வாரிய இணையதளத்தில் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு பற்றி முன்னரே மக்கள் தெரிந்து கொள்வதற்கு இணையத்தள லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு மற்றும் பல்வேறு பணிகளுக்காக குறிப்பிட்ட நாட்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் நடக்கும்போது காலை 9 மணியில் தொடங்கி மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். இதைப்பற்றி மின்சார வாரியம் சார்பில் முன்கூட்டிய தகவல் அளிக்கப்படுகிறது
மின் வாரிய இந்த இணையதளத்தில் சென்று உங்கள் பகுதியைத் தேர்வு செய்து பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளார்களா, மிந்தடை ஏற்படும் நாள் எது என்று அறிந்துகொள்ளலாம். மாதாந்திர பராமறிப்பு பணி மட்டும் முன்னதாக தெரிந்து கொள்ளலாம்திடீரென ஏற்படும் மின்வெட்டு குறித்து இந்தத் தளத்தில் தகவல் அறிய முடியாது.
கீழ்உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
Tags: முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி