சென்னையில் டிராபிக் விதி மீறினால் சிக்னல் போர்டில் அபராதம் மற்றும் உங்கள் முகம் தெரியுமா? உண்மை என்ன chennai signal tracker fake news
சென்னையில் போக்குவரத்து விதிமீறல் செய்பவரின் முகம், வாகன விவரங்கள் மற்றும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் போன்றவற்றை பெரிய திரைகளில் காட்டுவதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், விதிமீறுபவர்களைக் கண்டறிவதற்கான அமைப்பையும், டிஜிட்டல் சைன்போர்டில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தையும் சென்னை போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டதாக வீடியோ காட்டுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உண்மை என்ன:-
அந்த வீடியோ போட்டோ ஷாப் எடிட் வீடியோ ஆகும், மேலும் அந்த வீடியோ 2022 ம் ஆண்டு முதல் இணையத்தில் பரவி வருகின்றது
காரணம் 1
அந்த வீடியோவில் டிராபிக் இல்லை ஆனால் டிராபிக்கில் உள்ளது போல் சத்தம் வருகின்றது
காரணம் 2
அந்த வீடியோவில் புகைப்படத்துடன் வரும் வண்டி எண் தவறாக உள்ளது
காரணம் 3
எந்த டிரைவில் லைசன்சிலும் அவ்வளவு தெளிவாக புகைப்படம் இருக்காது
இதுவரை அதிகாரபூர்வமாக சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் நபர்களின் போட்டோ டிராபிக் சிக்னலில் தெரியும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை போலீசார் அறிமுகப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை ஆகும்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி