Breaking News

ட்விட்டருக்கு போட்டியாக மெட்டாவின் "திரெட்ஸ்" அறிமுகம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

ட்விட்டர் செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா "திரெட்ஸ்" என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது



டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதலாக டுவிட்டர் தொடர் சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அதிகாரப்பூர்வ ப்ளூ டிக்கை பெற கட்டணம், ட்விட்டர் பணியாளர்கள் பணி நீக்கம், தொழில்நுட்ப கோளாறு ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளில் இருந்து இடுகைகளைப் பதிவிட அனுமதிக்கும் ‘டுவிட்டர் டெக்’ சேவை ஆகஸ்ட் மாதம் முதல் கட்டணச் சந்தாதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் போன்றவற்றால் பயனாளர்கள் பலர் டுவிட்டர் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில்தான் டுவிட்டர் பயனாளர்களை ஈர்க்கும் விதமாக அதேபோன்ற வசதிகளுடன், கூடுதலாக சில சிறப்பம்சங்களுடன் கூடிய Threads என்ற புதிய சமூக வலைதள செயலியை மெட்டா நிறுவனம் இன்று அறிமுகபடுத்தியுள்ளது

திரட்ஸ் சிறப்பம்சங்கள்:-

இதன் மூலம் உடனுக்குடன் செய்திகள், கருத்துக்கள் ,புகைப்படம், வீடியோக்கள் என அனைத்தையும் பதிவிட முடியும்

டுவிட்டரில் ஒரு குறிப்பிட்ட செய்தியில் தொடர்ந்து பல கருத்துப் பதிவுகள்,இடுவதை ‘திரெட்ஸ்’ எனக் குறிப்பிடப்படும்  எனவே மெட்டா நிறுவனம் தன் செயலியின் பெயராக திரெட்ஸ் என வைத்துள்ளது

திரெட்ஸ்’ கணக்கைப் பயனர்கள் தங்களின் புகைப்படங்களைப் பகிரும் தளமான ‘இன்ஸ்டகிராம்’ கணக்குடன் இணைத்துக்கொள்ள முடியும்

அதிகாரப்பூர்வ ப்ளூடிக் போன்றவற்றிற்கு பணம் செலுத்த தேவையில்லை என்றும் கூறப்படுகிறது.

இன்று முதல் உலகம் முழுவதும் அனைவரும் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஆப் டவுன் லோடு செய்ய:-

https://play.google.com/store/apps/details?id=com.instagram.barcelona

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback