தமிழகம் முழுதும் 36 மாவட்ட பதிவாளர்கள் பணியிட மாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு
தமிழகத்தில் இன்று 36 மாவட்ட பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 36 மாவட்ட பதிவாளர்களை இடமாற்றம் செய்து பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தி.நகர் மாவட்ட பதிவாளர் நிலையில் உள்ள சார்பதிவாளர் கே.செந்தில்நாதன், தஞ்சை மாவட்ட பதிவாளராகவும்,
செய்யாறு மாவட்ட பதிவாளர்ஜி.அறிவழகன், செங்கல்பட்டுக்கும், வடசென்னை மாவட்ட பதிவாளர் ஏ.கலைச்செல்வி செய்யாறுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
சுரேஷ் பாபு, மாவட்ட பதிவாளர் (தணிக்கை) தென்காசி , இவர் மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) பட்டுக்கோட்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ரத்தினவேல் மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) ராமநாதபுரம், இவர் மாவட்ட பதிவாளர் (தணிக்கை) தென்காசிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். என 36 மாவட்ட பதிவாளர்களை அதிரடியாக மாற்றி உத்தரவிட்டப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்