2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிரான ராகுல் காந்தி மனுவை தள்ளுபடி செய்தது குஜராத் உயர்நீதிமன்றம் Rahul Gandhi case
பிரதமர் மோடி குறித்து அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு, ராகுல் காந்தி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது குஜராத் உயர்நீதிமன்றம்
எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என ராகுல் காந்தி 2019 ம் ஆண்டு கர்நாடகாவில் பேசியிருந்தார்.
அதனை எதிர்த்து குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் இந்திய தண்டனைச் சட்டம் 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும் ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் அளித்து அவருக்கு ஜாமீன் வழங்கியது,அதனால் அவர் தனது மக்களவை எம்.பி. பதவியை இழந்தார்
சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சூரத் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த ராகுல் காந்தி, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கவும் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கிய செசன்ஸ் கோர்ட்டு, தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. அதையடுத்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி
இந்நிலையில் சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு, ராகுல் காந்தி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்