சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை நடத்த முடிவு- பள்ளிகல்வித்துறை அமைச்சர் தகவல்
சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை நடத்த முடிவு- பள்ளிகல்வித்துறை அமைச்சர் தகவல்
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து கடந்த 1ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால், கோடை வெயில் குறையாததன் காரணமாக ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது .ஆனாலும் வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்ததன் காரணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்தி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 14ஆம் தேதியும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 12ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒத்தி வைத்தார்
கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேரம் பற்றாக்குறை ஏற்படும்.பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாகவும் மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும், ஆசிரியர்கள் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் வகுப்புகள் நடத்தப்படும் என அவர் கூறினார்
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்