Breaking News

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நினைவு பேனா சின்னம் அமைக்க கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி

அட்மின் மீடியா
0

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட உள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நினைவு பேனா சின்னத்திற்க்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது!

தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கிய நிலையில் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி அளித்துள்ளது

 


தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினா கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதலுக்காக தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது

இதனை பரிசீலனை செய்த மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு 15 நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கியது.இதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி வழங்கியுள்ளது. கடலுக்கு நடுவே முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நினைவு பேனா சின்னத்திற்க்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது

15 நிபந்தனைகளுடன் அனுமதி:-

ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக்கூடாது. 

நிபுணர் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். 

அவசரகால மீட்புப்பணி தொடர்பான விரிவான திட்டம் தீட்டப்பட்ட வேண்டும். 

ஆமை இன பெருக்க காலத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது. 

தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் மண் அரிப்பு, மணல் திரட்சி உள்ளிட்டவை குறித்து கண்காணிக்க வேண்டும் 

என 15 நிபந்தனைகளுடன் பேனா நினைவு சின்னத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தேவையான அனைத்து அனுமதிகளும் கிடைத்திருப்பதால், விரைவில் பணிகளை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback