Breaking News

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயமா !! பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

அட்மின் மீடியா
0

அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.



தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் வரும் கல்வி ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் மீறினால் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், மாலை நேர வகுப்புகள் கட்டாயம் கிடையாது எனவும், தேவைப்படும் பள்ளிகள் வைத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாலை நேர வகுப்புகளை வைக்கொள்ளலாம் எனவும், ஆனால் மாலை நேர வகுப்புகள் கட்டாயம் கிடையாது எனவும் பள்ளிக்கள்வித்துறை அறிவித்துள்ளது.

முன்னதாக தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதன் காரணமாக சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback