12ம் வகுப்பு படித்தவர்கள் வழக்கறிஞர் படிப்புக்கு சேர ஜூன் 10 ம் தேதி கடைசி நாள் முழு விவரம் law colleges admission
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ், இயங்கும் சட்டக்கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு சேர விண்ணப்பிக்கும் தேதி வரும் ஜூன் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ், இயங்கிவரும் சீர்மிகு சட்டப்பள்ளி ஆகியவற்றில் பயிற்றுவிக்கப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பிற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 10-ம் தேதி மாலை 05.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
நீங்களும் வழக்கறிஞர் ஆகலாம் 12 ம் வகுப்பு படித்தவர்கள் சட்டபடிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம்
Tags: கல்வி செய்திகள்