Breaking News

நீங்களும் வழக்கறிஞர் ஆகலாம் 12 ம் வகுப்பு படித்தவர்கள் சட்டபடிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம் law colleges admission tamilnadu

அட்மின் மீடியா
0

சட்டப் படிப்புகளில் சேர மே 15 ம் முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 


சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் பிஏ. எல்எல்பி, பிபிஏ. எல்எல்பி, பிகாம். எல்எல்பி, பிசிஏ. எல்எல்பி ஆகிய 5 ஆண்டு இளங்கலை ஆனர்ஸ் சட்டப் படிப்புகளும், அதேபோல், அரசு சட்டக் கல்லூரிகளில் பிஏ. எல்எல்பி 5 ஆண்டு சட்டப் படிப்பும் வழங்கப்படுகின்றன. 

தமிழகத்தை பொறுத்தவரை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர்    சட்டப் பல்கலைகழகத்தின்  கீழ்   சென்னை மதுரை,  திருச்சி,  கோவை,  திருநெல்வேலி,  செங்கல்பட்டு, வேலூர் ,  விழுப்புரம்,  தர்மபுரி, இராமநாதபுரம், சேலம்,  நாமக்கல்  மற்றும்  தேனி  என  13  அரசு  சட்டக்கல்லூரிகள் மற்றும்  சேலத்திலும், திண்டிவனத்திலும் தலா ஒரு தனியார் சட்டக்கல்லூரிகள் இயங்கி வருகின்றன 

விண்ணப்பிக்கும் முறை :-

தமிழ்நாடு  டாக்டர்   அம்பேத்கர்   சட்டப்பல்கலைகழகத்தின்  கீழ்  செயல்படும்  13 சட்டக்கல்லூரிகளில்  சேருவதற்கு  நுழைவு தேர்வு ஏதும் கிடையாது.  12ம்  வகுப்பில் எடுக்கும்   மதிப்பெண்ணின்   அடிப்படையில்தான் தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கர் சட்டப்பல்கலைகழகத்தில்   மாணவர் சேர்க்கைக்கான   கலந்தாய்வு   (Counselling) நடத்தப்படுகிறது. 

சட்டக்கல்லூரியில்   சேர்வதற்காக  ஆன்லைனிலும் விண்ணப்பப்படிவத்தை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்திலும் மற்றும் அனைத்து சட்டக்கல்லூரிகளிலும்   நேரில்  சென்று வாங்கி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை டாக்டர்   அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து   சட்டக்கல்லூரிகளிலும்   நேரடியாகவோ   அல்லது   தபால்  மூலமாகவோ மாணவர்கள்  சமர்பிக்க  வேண்டும். 

இணைக்க வேண்டிய சான்றிதழ்:-

12ம்  வகுப்பு  மதிப்பெண் சான்றிதழ்,  

பிறப்பு  சான்றிதழ்,  

10ம்  வகுப்பு  மதிப்பெண்  சான்றிதழ்,  

பள்ளி மாற்றுச்  சான்றிதழ்,  

சாதிச்  சான்றிதழ்  

ஆகிய  ஆவணங்களின்  நகல்  எடுத்து,  மேற்படி ஆவணங்களில்  மாணவர்களின்  கையெழுத்து  செய்ய  வேண்டும். 

டாக்டர்   அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகம்   விண்ணப்பத்தினை  பரிசீலனை செய்து  மாணவர்களின்  தரவரிசை  பட்டியலை  (Rank List)  பல்கலைகழகம்  தனது இணையதளமான www.tndalu.ac.in    என்ற இணையதளத்தில்  வெளியிடும். 

தரவரிசை   பட்டியலின்   (Rank List)   அடிப்படையில்   ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக       கலந்தாய்வு   (Counselling)   நடத்தப்படும். 

கல்விதகுதி:-

12 ம் வகுப்பு  தேர்ச்சி 

5 ஆண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க:-

https://www.tndalu.ac.in/

விண்ணப்பிக்க கடைசி தேதி:-

10.06.2023

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback