Breaking News

சவூதி இளவரசர் இலவச ஹஜ் ஸ்பான்சர் என பரவும் செய்தி உண்மை என்ன Mohammed Bin Salman Free Hajj Scheme

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களின் ஸ்பான்சரில் இலவச ஹஜ் பயணத்திற்க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று  ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 





அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-
 
*HAJJ! HAJJ!! HAJJ!!!* 
 
*HURRY UP,*
 *_Apply today for free_* 
 
EVERY ONE CAN APPLY FOR 2023 FREE SPONSORSHIP HAJJ SCHEME
 
MOHAMMED BIN SALMAN is providing Over 400 Thousand Hajj Slot for everyone willing to do this year hajj without paying money. 👉 
 
It is no longer news.

*APPLY NOW*
https://shtnar.com/hajj-2023-scheme
 
உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு ஆராய்ந்தது, மேலும் நாம் தேடியவரையில் 
 
சவூதி அரசாங்கம் அது போல் ஓர் அறிவிப்பை அறிவிக்கவில்லை
 
சவூதி மன்னரும் அறிவிக்கவில்லை
 
சவூதி இளவரசரும் அறிவிக்கவில்லை 
 
உண்மை என்னவென்றால் சவுதி இளவரசரிடமிருந்து ஹஜ்ஜுக்கு ஸ்பான்சர்ஷிப் வழங்குவதாகக் கூறும் இந்த இணையதளம் ஒரு மோசடி தளமாகும் 
 
பலரும் ஷேர் செய்யும் அந்த லின்ங்கில் சென்றால் விண்ணப்பதாரர்கள் பெயர், போன் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் வயது உள்ளிட்ட விவரங்களைத் தரவும், 
 
மேலும் தொடர பாஸ்போர்ட் உள்ளதா என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
 
இதற்குப் பிறகு, பயனர்கள் ஸ்பான்சர்ஷிப்பிற்குத் தகுதி பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
 
மேலும் தொடர இணைப்பை ஐந்து குழுக்கள் அல்லது 15 நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கூறுகின்றது
 
அடுத்து நீங்கள் சென்றால் இந்தக் கட்டத்திற்குப் பிறகு, தேவை முடிந்ததும் மீண்டும் அதேபோல் தான் இருக்கும்
 
கடந்த மாதம்  அமீரக இளவரசர் பெயரில் ரமலான் மாத போட்டி என ஓர் செய்தியை பலரும் ஷேர் செய்தார்கள் அந்த சமயம் அட்மின் மீடியா அதனை பொய் என்று செய்தி வெளியிட்டு இருந்தது அதனை படிக்க:- https://www.adminmedia.in/2023/03/fact-check-mohammed-bin-rashid-ramadan.html


இது மாதிரி fake மெசேஜ் அனுப்பி உங்கள் போனில் உள்ள அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் திருடப்படலாம்

மூன்றாவதாக கவனம் தேவை 

இந்த லின்ங்கில் நீங்கள் போனால் என்ன நடக்கும் நீங்க இதனை மற்றவர்களுக்கு தெரியபடுத்த உங்கள் வாட்ஸ் குரூப்புக்கு ஷேர் பண்ணுங்க என வரும் நீங்களும் நம்பி அனுப்புங்க திரும்ப அந்த லின்ங்கில் போனாலும் மீண்டும் அதே போல் தான் ஒன்றும் இருக்காது 

நீங்கள் ஷேர் செய்து விட்டு போயிடுவீங்க நீங்கள் ஷேர் பண்ண அந்த வதந்தியை அவர்கள் அடுத்தவர்களுக்கு ஷேர் செய்வார்கள் இப்படியேதான் வதந்திகள் பரவிக் கொண்டே வருகிறது.

இது போன்ற பொய்யான செய்திகளால்  உங்கள் தகவல் திருடப்படலாம் என்பது  ஆதாரபூர்வமான உண்மை எனவே பொய்யான செய்தியை ஷேர் செய்யாதீர்கள் என வேண்டி கேட்டு கொள்கின்றோம்

எனவே இந்த மெசேஜ் போலியானது என்பதால் அதில் உள்ள லிங்க் கிளிக் செய்தால் தனிப்பட தரவுகள் திருடு போகும் அபாயம் உள்ளது. எனவே மக்கள் இதுபோன்ற மெசேஜை நம்ப வேண்டாம்


மேலும் நீங்கள் சிந்திக்க 

இதுபோல் பல லின்ங்குகள் இதுவரை சமூக வலைதளங்களில் பரவி உள்ளது ஏன் நீங்களே இது போல் பல லின்ங்கினை ஷேர் செய்து உள்ளீர்களே மறந்து விட்டீர்களா

ஹோண்டா பைக் இலவசம்

ரீசார்ஜ் இலவசம்

லேப்டாப் இலவசம்
 
லாக்டவுன் ரூ 5000 இலவசம் 

10 ஜிபி இலவசம்
 
என நீங்கள் ஷேர் செய்த பொய்யான வதந்தி செய்தி போல் தான் இதுவும்

எனவே பொய்யான செய்தியை ஷேர் செய்யாதீர்கள் என அட்மின் மீடியா சார்பாக வேண்டி கேட்டு கொள்கின்றோம் 


இதுவரை நீங்கள் பரப்பிய பொய் செய்திகள்

 
ஹோண்டா பைக் இலவசம் என பரவும் செய்தியின் உண்மை என்ன?
 
 
 
அனைவருக்கும் பிஎப் என பரவும் செய்தியின் உண்மை என்ன?
 
 
 
லாக்டவுனால் அனைவருக்கும் 5000ரூபாய்  என பரவும் செய்தியின் உண்மை என்ன?
 
 
மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்  10000ரூபாய்  என பரவும் செய்தியின் உண்மை என்ன?
 
 
 2000 ரூபாய் கொராணா நிவாரண நிதி என பரவும் செய்தியின் உண்மை என்ன

 
லேப்டாப்  இலவசம் என பரவும் செய்தியின் உண்மை என்ன?
 

மாணவ மாணவிகளுக்கு லேப்டாப்  இலவசம் என பரவும் செய்தியின் உண்மை என்ன?
 

19 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன், 159 ரூபாய்க்கு டீவி என பரவும் வதந்தி

 
ஆன்லைன் வகுப்புகளுக்கு 10 ஜிபி  இலவசம் என பரவும் செய்தியின் உண்மை என்ன?
 
  
ஹோண்டா பைக் இலவசம் என பரவும் செய்தியின் உண்மை என்ன?

 
முடிவு:-


ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.arabnews.com/node/2288326/saudi-arabia

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback