மெலிசா புயலின் கண் பகுதிக்குள் புகுந்த அமெரிக்க விமானம்! அதிர்ச்சி வீடியோ காட்சிகள்! melissa cyclone eye video
மெலிசா புயலின் கண் பகுதிக்குள் புகுந்த அமெரிக்க விமானம்! அதிர்ச்சி வீடியோ காட்சிகள்! melissa cyclone eye video
அமெரிக்க விமானப்படையின் "சூறாவளி வேட்டைக்காரர்கள்" (Hurricane Hunter) குழுவினர் படமாக்கிய இந்தக் காட்சிகள், விமானம் புயலின் மையப்பகுதி வழியாகச் சென்றபோது காணப்பட்ட "ஸ்டேடியம் எஃபெக்ட்" எனப்படும் அரிய வானிலை நிகழ்வைக் காட்டுகிறது.
சூறாவளி வேட்டைக்காரர்கள்" என்று அழைக்கப்படும் அமெரிக்க விமானப்படை ரிசர்வ் குழுவினர் திங்கள்கிழமை தேசிய புயல் எச்சரிக்கை மையத்திற்கான தரவுகளைச் சேகரிக்க மெலிசா சூறாவளியின் மையப்பகுதி வழியாக பறந்தனர்.
அக்டோபர் 21-ஆம் தேதி கரீபியன் கடற்பரப்பில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக திரிந்து, மணிக்கு சுமார் 85 கிலோ மீட்டர் வேகத்தில் மெலிசா புயலாக மாறியது.
தொடர்ந்து அக்டோபர் 25 அன்று, மணிக்கு சுமார் 120 கி.மீ வேகத்தில் புயல் ஜமைக்கா தீவை நோக்கி நகர்ந்தது.படிப்படியாக காற்றின் வேகம் அதிகரிக்க, அக்டோபர் 27 அன்று புயல் எண் 4 எச்சரிக்கை கொடுக்கும் அளவிற்கு அதிதீவிர புயலாக இது மாறியது.
அப்போது, இது உயிருக்கு ஆபத்தான அதி பயங்கர புயல் என அமெரிக்க தேசிய புயல் மையம் எச்சரித்தது.
அக்டோபர் 28, 2025 அன்று தேசிய கடல்சார் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தால் வழங்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் படம் மெலிசா புயலின் கண் பகுதியை காட்டுகிறது. (NOAA via AP)ஜமைக்காவை நோக்கி பயணித்த மெலிசா புயலின் வேகமும் குறையாமல் மணிக்கு சுமார் 285 கி.மீ என்ற அளவை எட்டியதால், அந்நாட்டிற்கு புயல் எண் 5 எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஜமைக்கா நாட்டின் டார்லிஸ்டன் பகுதியில் கரையை கடந்த மெலிசா புயலின் வேகம் மணிக்கு 295 கி.மீ ஆக இருந்தது. பின்னர், கேம்பிரிட்ஜ் பகுதி வாயிலாக அதே வேகத்தில் பயணித்த புயல், கடந்து வந்த இடங்கள் அனைத்தையும் சூறையாடியது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1983471573995794844
Tags: வெளிநாட்டு செய்திகள்
