இன்று இங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அட்மின் மீடியா
0
இன்று இங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சிவகங்கை:-
மருது பாண்டியர்களின் நினைவேந்தலையொட்டி சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று(அக்.27) விடுமுறையாகும்.
தூத்துக்குடி:-
திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும்.
ஏனாம்:-
மொன்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் புதுவையின் ஏனாம் மாவட்டத்திற்கும் இன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை இல்லை:-
மொந்தா புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரத்திற்கு இன்று மிக கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அலர்ட் கொடுக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வரை விடுமுறை அறிவிப்பு வெளியாகவில்லை.
Tags: தமிழக செய்திகள்
