Breaking News

வங்க கடலில் உருவான மாந்தா புயல் - எப்பொழுது கரையை கடக்கும் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை?

அட்மின் மீடியா
0

வங்க கடலில் உருவான மாந்தா புயல் - எப்பொழுது கரையை கடக்கும் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை? 


தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் விளைவாக தாழ்வுப் பகுதி உருவாகி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது இன்று (அக்.25) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை (அக்.26) ஆழ்ந்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்து, 

27ஆம் தேதி தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. 

புதிதாக உருவாகும் புயலுக்கு மொந்தா (Montha) என பெயரிடப்பட உள்ளது. இந்த பெயரை தாய்லாந்து பரிந்துரைத்து வழங்கியுள்ளது. 

மொந்தா புயல் 99.999 சதவீதம் ஆந்திராவை நோக்கி செல்லத் தான் வாய்ப்பு உள்ளது. புயலானது வட தமிழக கடலோர மாவட்டங்களுக்கு அருகே வராமல் கடல் வழியாக ஆந்திரா செல்லும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை இருக்காது, மிதமான மழையே இருக்கும்.

ஆந்திராவுக்கு செல்லும் வழியில் வட தமிழக கடலோர மாவட்டங்களுக்கு அருகே வந்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை இருக்கும். 

இன்று (அக்.25): கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது.

நாளை (அக்.26): சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு, புதுச்சேரி

27ம் தேதி: திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டையில் கன முதல் மிக கனமழை; செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூரில் கனமழை

28ம் தேதி: திருவள்ளூர், ராணிப்பேட்டையில் கனமழை

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback