Breaking News

SIR - வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் - நாம் செய்யவேண்டியது என்ன - ஜமாஅத்துல் உலமா சபை வெளியிட்ட செய்தி முழு விவரம்

அட்மின் மீடியா
0
SIR - வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் - நாம் செய்யவேண்டியது என்ன - ஜமாஅத்துல் உலமா சபை வெளியிட்ட செய்தி முழு விவரம்

SIR - வாக்காளர் பட்டியல்

கண்ணியமிகு ஆலிம்கள், மஸ்ஜித்களின் நிர்வாகப்பெருமக்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வாக்குரிமை நமது அடிப்படை உரிமைகளில் ஒன்று. அதை ஒருபோதும் நாம் இழக்கவும் கூடாது, நம்மிடமிருந்து அதைப் பறிக்க அனுமதிக்கவும் கூடாது.

இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் வாக்காளர் பெயர் பட்டியலை மறுஆய்வு செய்யும் (SIR = வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) பணியைத் தொடங்கவிருக்கிறது. நவம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதிவரை இதற்கான பணிகள் வீடுவீடாகச் சென்று மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

நமக்குத் தரப்படும் Enumeration form- ல் கேட்கப்படும் விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யவேண்டிய தகவல்களைப் பெற்றிட voters.eci.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று தகவல்கள் பெறலாம்.

குறிப்பு: இந்த form பூர்த்தி செய்து கொடுக்கும்போது Passport size புகைப்படம் ஓட்ட வேண்டும். ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்க தேவையில்லை. BLO என்ற Booth level officers கொண்டுவரும் Enumeration form ஐ கவனமாகப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதற்கான நகலை நாம் வைத்துக் கொள்ள வேண்டும்.

அநாவசியமான சிரமங்களையும் அலைச்சல்களையும் தவிர்க்கத் தொடக்க நிலையிலேயே கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு செய்துவிட்டால் நமது பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் இன்ஷா அல்லாஹ் இடம்பெறும். இதை வலியுறுத்தி வரும் ஜூமுஆக்களில் அறிவிப்பு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்காக, போதுமான தகவல்கள் அடங்கிய இரண்டு காணொளிகள் அனுப்பப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப அவ்வப்போது தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை இதுகுறித்து அறிவிப்புகளை இன்ஷா அல்லாஹ் வெளியிடும்.



Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் மார்க்க செய்திகள்

Give Us Your Feedback