FACT CHECK அமீரக இளவரசர் பெயரில் ரமலான் மாத போட்டி என பரவும் பொய்யான செய்தி யாரும் நம்பாதீர்கள் mohammed bin rashid ramadan competition 2023 real or fake
அட்மின் மீடியா
0
FACT CHECK அமீரக இளவரசர் பெயரில் ரமலான் மாத போட்டி என பரவும் பொய்யான செய்தி யாரும் நம்பாதீர்கள் mohammed bin rashid ramadan competition 2023 real or fake
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அமீரக இளவரசர் ரமலான் பரிசு கொடுக்கின்றார் எனவும் அதனை பெற இந்த லிங்கில் சென்று உங்கள் விபரம் அளிக்கவும் என்று ஒரு பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
இது போன்ற செய்திகளை நம்புகின்றவர்கள் முதலில் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என அட்மின் மீடியா விரும்புகின்றது
முதலில் இந்த செய்தியின் உண்மை என்னவென்றால்...
அது போல் ஓர் செய்தியை அமீரக அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்று தெரிந்து கொள்ளுங்கள்
அந்த லின்ங் அமீரக இளவரசரின் அதிகாரபூர்வ அறிவிப்பும் கிடையாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்
இரண்டாவது எச்சரிக்கை அவசியம்
இது மாதிரி fake மெசேஜ் அனுப்பி உங்கள் போனில் உள்ள அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் திருடப்படலாம்
மூன்றாவதாக கவனம் தேவை
இந்த லின்ங்கில் நீங்கள் போனால் என்ன நடக்கும் நீங்க இதனை மற்றவர்களுக்கு தெரியபடுத்த உங்கள் வாட்ஸ் குரூப்புக்கு ஷேர் பண்ணுங்க என வரும் நீங்களும் நம்பி அனுப்புங்க திரும்ப அந்த லின்ங்கில் போனாலும் மீண்டும் அதே போல் தான் ஒன்றும் இருக்காது
நீங்கள் ஷேர் செய்து விட்டு போயிடுவீங்க நீங்கள் ஷேர் பண்ண அந்த வதந்தியை அவர்கள் அடுத்தவர்களுக்கு ஷேர் செய்வார்கள் இப்படியேதான் வதந்திகள் பரவிக் கொண்டே வருகிறது.
இது போன்ற பொய்யான செய்திகளால் உங்கள் தகவல் திருடப்படலாம் என்பது ஆதாரபூர்வமான உண்மை எனவே பொய்யான செய்தியை ஷேர் செய்யாதீர்கள் என வேண்டி கேட்டு கொள்கின்றோம்
மேலும் இந்த செய்தி கடந்த 2020 ம் ஆண்டு ரமலான் மாதமும் பரவியது அப்போது இது குறித்து அமீரக அரசின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் அந்த செய்தி பொய்யான தகவல் என விளக்கம் அளித்துள்ளார்கள்
எனவே இந்த மெசேஜ் போலியானது என்பதால் அதில் உள்ள லிங்க் கிளிக் செய்தால் தனிப்பட தரவுகள் திருடு போகும் அபாயம் உள்ளது. எனவே மக்கள் இதுபோன்ற மெசேஜை நம்ப வேண்டாம்
அமீரக அரசின் அறிவிப்பை படிக்க:-
https://twitter.com/emaratalyoum/status/1255536046806315010
https://gulfnews.com/uae/ramadan-whatsapp-scam-beware-of-link-claiming-to-
மேலும் நீங்கள் சிந்திக்க
இதுபோல் பல லின்ங்குகள் இதுவரை சமூக வலைதளங்களில் பரவி உள்ளது ஏன் நீங்களே இது போல் பல லின்ங்கினை ஷேர் செய்து உள்ளீர்களே மறந்து விட்டீர்களா
ஹோண்டா பைக் இலவசம்
ரீசார்ஜ் இலவசம்
லேப்டாப் இலவசம்
லாக்டவுன் ரூ 5000 இலவசம்
10 ஜிபி இலவசம்
என நீங்கள் ஷேர் செய்த பொய்யான வதந்தி செய்தி போல் தான் இதுவும்
எனவே பொய்யான செய்தியை ஷேர் செய்யாதீர்கள் என அட்மின் மீடியா சார்பாக வேண்டி கேட்டு கொள்கின்றோம்
இதுவரை நீங்கள் பரப்பிய பொய் செய்திகள்
ஹோண்டா பைக் இலவசம் என பரவும் செய்தியின் உண்மை என்ன?
அனைவருக்கும் பிஎப் என பரவும் செய்தியின் உண்மை என்ன?
லாக்டவுனால் அனைவருக்கும் 5000ரூபாய் என பரவும் செய்தியின் உண்மை என்ன?
மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் 10000ரூபாய் என பரவும் செய்தியின் உண்மை என்ன?
2000 ரூபாய் கொராணா நிவாரண நிதி என பரவும் செய்தியின் உண்மை என்ன
லேப்டாப் இலவசம் என பரவும் செய்தியின் உண்மை என்ன?
மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் இலவசம் என பரவும் செய்தியின் உண்மை என்ன?
19 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன், 159 ரூபாய்க்கு டீவி என பரவும் வதந்தி
ஆன்லைன் வகுப்புகளுக்கு 10 ஜிபி இலவசம் என பரவும் செய்தியின் உண்மை என்ன?
ஹோண்டா பைக் இலவசம் என பரவும் செய்தியின் உண்மை என்ன?
Tags: FACT CHECK மறுப்பு செய்தி