மதீனாவில் உம்ரா பேருந்து டீசல் டேங்கர் லாரியுடன் மோதி தீ விபத்து - 42 இந்தியர்கள் மரணம் 42 Indian Umrah pilgrims killed in bus accident in Saudi
அட்மின் மீடியா
0
சவுதி அரேபியாவில் மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் செய்த உம்ரா பேருந்து டீசல் டேங்கர் லாரியுடன் மோதி தீப்பிடித்ததில் 42 இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேந்ர்த யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். 42 Indian Umrah pilgrims killed in bus accident in Saudi
பேருந்தில் மொத்தம் 43 பேர் இருந்த நிலையில், 20 பெண்கள் மற்றும் 11 பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் உட்பட பெரும்பாலானோர் தீயில் சிக்கி உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சவுதி நேரப்படி இரவு 11 மணியளவில் (இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணி), பத்ருக்கும் மதீனாவுக்கும் இடையே உள்ள முஃபாரஹத் பகுதியில் இந்த பேரழிவு நேர்ந்தது. மக்காவில் புனித யாத்திரை முடித்துவிட்டு யாத்ரீகர்கள் மதீனாவுக்கு செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டது.
பேருந்து டீசல் டேங்கர் மீது மோதி உடனடியாக தீப்பிடித்தது. தீயின் அளவு மிக அதிகமாக இருந்ததால், பல உடல்களை அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளது.
விபத்தில் ஒரே ஒருவராக உயிர் பிழைத்த 25 வயது அப்துல் ஷுஐப் முகமது காயமடைந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உள்ளூர் வட்டாரங்கள் 42 பேர் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளன, ஆனால் அதிகாரிகள் இன்னும் உயிரிழப்புகளின் சரியான எண்ணிக்கையை சரிபார்த்து வருகின்றனர் விபத்து நடைபெற்ற இடத்தில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணியில் சவுதி அரேபியாவின் அவசர மீட்பு குழு ஈடுபட்டு வருகிறது.
எத்தனை பேர் உயிரிழந்தனர். எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக அதிகாரிகள் இன்னும் தெரிவிக்கவில்லை.
விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இல்லை, ஆனால் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் மற்றும் பயண நிறுவனம் இரண்டும் விபத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
At least 42 people were charred to death after a bus carrying Umrah pilgrims collided with a diesel tanker near Medina, according to local media in Saudi Arabia on Monday. The victims are believed to be Indian nationals, with several reportedly from Hyderabad.
Tags: மார்க்க செய்திகள் வெளிநாட்டு செய்திகள்
