தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு
இதுகுறித்து தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவு:
- கால்நடை பராமரிப்பு, மருத்துவப் பணிகள் இயக்குநர் இரா.கண்ணன், தான் கூடுதலாக கவனித்து வந்த மாநில மனித உரிமைகள் ஆணைய செயலர் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். அவர் தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் துணைத் தலைவர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.
- சென்னை கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் அம்ரித், கால்நடை பராமரிப்பு, மருத்துவப் பணிகள் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்
- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் ச.கவிதா, ஆவின் இணை மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்
- தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை இணை இயக்குநர் சி.முத்துக்குமரன், அதே முகமையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்
- சிப்காட் பொது மேலாளர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் உறுப்பினர் செயலர் மற்றும் சென்னை நதிகள் சீரமைப்பு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்
- சென்னை ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாய ஆணையராக இருந்த மு.வீரப்பன், சென்னை கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
- திருநெல்வேலி சிப்காட் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ரேவதி, உயர்கல்வித் துறை துணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்
Tags: தமிழக செய்திகள்

