Breaking News

அட்மின் அனுமதி தந்தால் மட்டுமே குருப்பில் இணைய முடியும் வாட்ஸ் அப் புதிய அப்டேட்

அட்மின் மீடியா
0

வாட்ஸ்அப் இன்ஸ்டண்ட் மெசேஜிங் ஆப் வாட்ஸ்அப் பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதால் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.வாட்ஸ்அப் ஆடியோ, வீடியோ காலிங், சேட், குரூப் சேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்குகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் குரூப் அம்சத்தில் மாற்றம் செய்துள்ளது. approve new participants என்ற புதிய அம்சம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.


approve new participants

தற்போது வாட்ஸப் குருப்பில் இணைய பலரும் குருப் லின்ங் ஷேர் செய்கின்றார்கள் அதில் நாம் நினைத்தால் சேரலாம் அல்லது விலகி கொள்ளலாம்

ஆனால் தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அப்டேப் படி  புதிதாக ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் நீங்கள் இணைய வேண்டும் என்றால் அந்த குரூப் அட்மின் அனுமதித்த பின் தான் இணைய முடியும். 

குரூப் லிங்க் வைத்திருந்தாலும் கூட அந்த குரூப் அட்மின் அனுமதி தந்தால் தான் நீங்கள் அந்த குருப்பில் இணைய முடியும் வகையில் புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அட்மின் தனது குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும் என்றும் யாரை இனைக்கவேண்டும் என அவரை மட்டும் இணைக்கலாம் இதனால் குருப் அட்மினுக்கு அதிகாரம் வளுப்பெற்றுள்ளது

புதிதாக ஒருவர் ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் இணைய வேண்டும் என்றால் அந்த குரூப் அட்மின் அனுமதித்த பின் தான் இணைய முடியும். குரூப் லிங்க் வைத்திருந்தாலும் கூட குரூப் அட்மின் அனுமதி வேண்டும் என்ற வகையில் புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பயன்படுத்துவது எப்படி:-

முதலில் எந்த குருப்பிற்க்கு செட் செய்யவேண்டுமோ அந்த குருப் செல்லுங்கள் 

அடுத்து அதில் உள்ள குரூப் செட்டிங் கிளிக் செய்யுங்கள்

அடுத்து அதில் புதிதாக உள்ள  ‘Approve New Participants’ என்ற அம்சம் இருக்கும். அதை ஆன் செய்யுங்கள். 

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback