Breaking News

TNPSC குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10117 ஆக அதிகரிப்பு

அட்மின் மீடியா
0

குரூப்-4 பதவிகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10117 ஆக அதிகரிப்பு


TNPSC குரூப் 4 காலிப்பணியிடங்களில்  2 ஆயிரத்து 816 இடங்கள் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 10 ஆயிரத்து 117 இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-ந்தேதி நடைபெற்றது இந்தத் தேர்வு முடிவு தற்போது வரை தேர்வு முடிவு வெளியாகவில்லை.

இதையடுத்து இந்த மாத இறுதிக்குள் தேர்வு முடிவு வெளியாகும் என்று தேர்வை நடத்திய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

ஏற்கனவே தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானபோது, 7 ஆயிரத்து 301 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த காலி பணியிடங்களை கூடுதலாக அதிகரித்து, டி.என்.பி.எஸ்.சி. நேற்று அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில், 2 ஆயிரத்து 816 இடங்கள் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 10 ஆயிரத்து 117 இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback