பெண்கள் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் Free Sewing Machine Scheme 2023
சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தின் வாயிலாக, தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்:-
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-
மாவட்ட சமூக நல அலுவலகத்தின் வாயிலாக விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்-
1. வட்டாட்சியரிடமிருந்துபெறப்பட்டவருமானச்சான்றுரூ. 72000/- ற்குள்
2.வட்டாட்சியரிடம்பெறப்பட்டஇருப்பிடச்சான்று
3.பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தையல் பயிற்சிசான்று (குறைந்த பட்சம் 6 மாத பயிற்சி பெற்றிருக்க வேண்டும்)
4.வயதுசான்று (20 முதல் 40 வயது வரை தகுதி )
5. சாதிச் சான்று
6. விண்ணப்பதாரரின் புகைப்படம் - 2 ( வண்ணபுகைப்படம் – கடவுச்சீட்டு அளவு)
7. விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றவர் என்பதற்கான சான்று
8.ஆதார் அடையாள அட்டை.
மேற்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பங்களை தென் சென்னை மாவட்ட சமூகநலம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிங்காரவேலர்மாளிகை, 8வது தளம், இராஜாஜிசாலை, சென்னை-01 அலுவலகத்தில் 06. 03. 2023-ற்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. சு.அமிர்தஜோதி. இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய முகவரி
மாவட்ட சமூக நல அலுவர்.
மாவட்ட சமூக நல அலுவலகம்,
சென்னை மாவட்டம்,\
https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2023/03/2023030171.pdf
Tags: முக்கிய செய்தி